குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்நிலையில் கேரள சட்டசபை கூட்டத்தில், இந்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபையில் இரண்டு நாள் சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில அமைச்சர் மொஹிந்திரா சிஏஏ க்கு எதிரான இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.