பஞ்சாப் சுகாதாரத் துறையில் டிரக் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நேஹா சூரி இன்று சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/neha-std.jpg)
பணி காலங்களில் அவரது நேர்மைக்காக பஞ்சாப் முழுவதும் அறியப்பட்ட இவர், இன்று பஞ்சாபில் உள்ள காரார் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.வேதியியலாளர் ஒருவர் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை வைத்திருந்ததால் அவரது மருந்து நிறுவனத்தின் உரிமத்தை இவர் ரத்து செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் அவரை சுட்டு கொன்றுள்ளார்.தனது நேர்மையால் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பிரபலமாக இருந்த நேஹாவின் மரணம் அம்மாநில மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us