pp

Advertisment

பஞ்சாபில், அரசு ஊழியர்கள் வங்கிக் கணக்கில் ஒரே நேரத்தில் இரண்டு மாதத்திற்கான சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது. இதைக்கண்ட அரசு ஊழியர்கள் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்ந்தனர். ஆனால் சிறிது நேரத்திற்குள் பஞ்சாப் அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது அதில், தவறுதலாக அரசு ஊழியர்கள் வங்கிக் கணக்குகளில் இரண்டு மாதசம்பளம் சேர்த்து செலுத்தப்பட்டுள்ளது. அதனால் ஊழியர்கள் ஒரு மாதசம்பளத்தை மட்டுமே வங்கியில் இருந்து எடுக்க வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களில் தவறுதலாக செலுத்தப்பட்ட சம்பளத்தை அரசு திரும்பப்பெற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.