corona vaccine

Advertisment

இந்தியாவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

இந்தநிலையில் பஞ்சாப் அரசு, உரிய மருத்துவ காரணங்கள் இன்றி கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக் கூட போடாத அரசு ஊழியர்கள் அனைவருக்கும், செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு கட்டாய விடுமுறை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மாநில மக்களை நோயிலிருந்து பாதுகாக்கவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களால் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விலை கொடுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பஞ்சாப் அரசு கூறியுள்ளது.