பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு, பெண்களுக்கு எல்கேஜி முதல் பிஎச்டி படிப்பு வரை இலவசக் கல்வியை அறிவித்துள்ளது.

Advertisment

punjab school

அரசுப் பள்ளிகள் அனைத்திலும் எல்லா மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டில் இருந்து புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும். நடப்பு கல்வியாண்டுக்கு உரிய பாடப்புத்தகங்களை ஆன்லைனில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாபில் முந்தைய அரசு காலிசெய்த எல்கேஜி வகுப்புகள் மீண்டும் அடுத்த ஆண்டுமுதல் தொடங்கப்படும். மாநிலம் முழுவதும் 13 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள், 48 கல்லூரிகளில் இலவச வைபை இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி பஞ்சாபின் கற்றறிந்தோர் சதவீதம் 75.84. இது தேசிய அளவான 73 சதவீதம் என்பதைக் காட்டிலும் அதிகம்தாந். பஞ்சாபில் கல்வியறிவு அற்றோர் எண்ணிக்கை 1 கோடியே, 87 லட்சத்து, 7 ஆயிரம் பேர். இந்த மாநிலத்தில் கல்வி அறிவு பெற்ற ஆண்கள் 80.44 சதவீதம் பேர். பெண்கள் 70.70 சதவீதம் பேர். எனவேதான் பெண்களுக்கு இந்த சலுகையை முதலில் அறிவித்துள்ளது அரசு.