கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பஞ்சாப் மாநிலத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,000 ஐ கடந்துள்ள சூழலில், இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,325 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் மே 3- ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்தச் சூழலில், பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க முதல்வர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, மே 3- ஆம் தேதிக்குப் பின்னரும் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த இரு வாரங்களுக்கு ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், இந்தக் காலகட்டத்தில் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.