பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக 23 பேர் பலியாகியுள்ள சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.
பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டம் படாலா என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று மாலை பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடித்து சிதறின. இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மேலும் அந்த பகுதி முழுவதும் விறுவிறுவென தீ பரவ ஆரம்பித்தது.
இந்த கோர விபத்தில் 23 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாக இருப்பதாகவும், நிவாரண முயற்சிகளுடன் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றும் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.