Advertisment

காங். முதல்வர் வேட்பாளர் யார்?- பரப்புரையிலேயே அறிவித்த ராகுல் காந்தி!

Punjab Cong. Who is the Chief Ministerial candidate? - Rahul Gandhi announced in the campaign!

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி சார்பாக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

Punjab Cong. Who is the Chief Ministerial candidate? - Rahul Gandhi announced in the campaign!

பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டதோடு, காணொளி வாயிலாகவும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி மேலோங்கி இருந்த நிலையில் லூதியானாவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பஞ்சாப் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை அறிவித்துள்ளார்.

elections congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe