Advertisment

முதல்வர் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுப்பு; போலீசார் தீவிர விசாரணை

Bomb found at Punjab CM's house

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையில் பகவந்த் மான் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில், சண்டிகரில் உள்ள முதல்வர் பகவந்த்மான் வீட்டின் அருகே உள்ள மாம்பழத் தோட்டத்தில் நேற்று வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. ஹரியானா மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் பயன்படுத்தும் ராஜேந்திரா பூங்காவில் உள்ள ஹெலிபேட் அருகே கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டைநேற்று மாலை ஆழ்துளைக்கிணறு ஆபரேட்டர் ஒருவர் தான்முதலில் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.இச்சம்பவம் குறித்துசண்டிகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

aap Punjab
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe