Advertisment

பள்ளி மாணவர்களை மகிழ்விக்கும் அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப் முதல்வர்!

AMARINDER SINGH

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை, முதல் அலையைவிட வேகமாக பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையைத் தடுக்க, நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று (14.04.2021) பிரதமர் மோடி, கரோனாபரவல் தொடர்பாக நாடு முழுவதுமுள்ள ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். கரோனாபரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. மஹாராஷ்ட்ராவில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இரவுநேரஊரடங்கும், வார இறுதியில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பஞ்சாப் மாநிலத்திலும் கரோனாபரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பஞ்சாப் மாநிலம் ஏற்கனவே இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இரவு 9 மணிமுதல்காலை 5 மணிவரை அமல்படுத்தப்படும் இந்த ஊரடங்கு, ஏப்ரல் 30 வரை நீடிக்கவுள்ளது. மேலும், பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குக்குள்50 சதவீத ரசிகர்களோடு செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் இம்மாத இறுதிவரை மூடப்படவுள்ளன.

Advertisment

இந்தநிலையில், ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில்லாமல்தேர்ச்சி பெறுவதாகபஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

schools captain amrinder singh Punjab corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe