Advertisment

110 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை மீட்பு!

பஞ்சாப்பின் சாங்ரூர் நகரில் பகவான்புரா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை வீடு ஒன்றின் அருகில் பதேவீர் என்ற 2 வயது குழந்தையை விளையாடி கொண்டிருந்தது. அந்த வீடு அருகே 150 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று துணியால் முடி வைக்கப்பட்டு இருந்தது. குழந்தையை மெல்ல நடந்து சென்றபொழுது தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான். இது அறிந்த குழந்தையின் அம்மா மீட்க குழந்தை முயன்று முடியாமல் போனது. தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

punjab child

இது குறித்து தகவல் அறிந்து வந்த ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பள்ளம் தொண்டப்பட்டு, அதன் மூலம் குழந்தையை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 4 நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டது.

punjab

Advertisment

உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தைக்காக பலரும் பிராத்தனை செய்து வந்த நிலையில் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையை உயிருடன் மீட்கப் போராடிய ராணுவத்திற்கும், காவல்துறையினருக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனால் அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

150ft 2years child borewell Punjab still stuck
இதையும் படியுங்கள்
Subscribe