Advertisment

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி முதல்வர் மனைவியிடமே 23 லட்ச ரூபாயை திருடிய திருடன்... கைது செய்த பஞ்சாப் காவல்துறை...

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி வங்கிக்கணக்கு விவரங்களை பெற்று பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் மனைவி கணக்கிலிருந்து 23 லட்ச ரூபாயை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

punjab chief ministers wife fall for bank fraudster call

அம்ரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா தொகுதியின் எம்.பியாக இருக்கிறார். இவருக்கு போன் செய்த ஒரு நபர், வங்கியின் மேலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியுள்ளார். அப்போது பிரனீத் கவுரின் வங்கி கணக்கு விவரங்களை பெற்றுள்ளார். அந்த நபர் வங்கிக்கணக்கு விவரங்களை பெற்ற சிறிது நேரத்தில், பிரனீத் கவுரின் கணக்கிலிருந்து 23 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

Advertisment

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறையை அணுகியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீசார், செல்போன் இணைப்பை வைத்து குற்றவாளியை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

Bank fraud Punjab
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe