Advertisment

மருத்துவரை மணக்கிறார் பஞ்சாப் முதலமைச்சர்! 

Punjab Chief Minister holds the doctor's hand!

Advertisment

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிங்கின் இரண்டாவது திருமணம் இன்று (07/07/2022) நடைபெறவுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியிடம் இருந்து மண விலக்கு பெற்ற நிலையில், மருத்துவர் குர்ப்ரீட் கவுர் என்பவரைத் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். சண்டிகரில் எளிமையான முறையில் திருமண விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருமண விழாவில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

இதனால் சண்டிகர் முழுவதும் பலத்த காவல்துறைப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. பயிற்சி மருத்துவரான குர்ப்ரீட் கவுர், தற்போது மொஹாலியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

marriage Punjab
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe