பஞ்சாப் மாநிலத்தில் வீட்டிற்கு வெளியே பெற்றோருடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை திருட முயன்ற நபர் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள ரிஷி நகரில் 4 வயது குழந்தை தனது தாயுடன் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கியுள்ளது. அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் அந்த குழந்தையை தூக்கிச்செல்ல முயற்சித்துள்ளார். அப்போது அதிர்ஷ்டவசமாக குழந்தையின் பெற்றோர் விழித்துக்கொண்டனர். இதனால் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு அந்த நபர் தப்பித்துள்ளான். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.