Advertisment

பஞ்சாப் இராணுவ முகாமில் தாக்குதல்! நான்கு வீரர்கள் பலி! 

Punjab army camp attack! Four military persons passes away

Advertisment

பஞ்சாப் மாநிலம், பதிண்டா எனும் பகுதியில் இந்திய இராணுவ முகாம் இயங்கி வருகிறது. இந்த முகாமில் இன்று அதிகாலை சாதாரண உடையில் புகுந்த மர்ம நபர் ஒருவர், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நான்கு இராணுவ வீரர்கள் பலியாகினர்.

இராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சூடு நடைபெற்று நான்கு வீரர்கள் பலியானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த உடனேயே இராணுவ முகாம் பகுதியை இராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து இராணுவமும் பஞ்சாப் போலீஸும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Punjab
இதையும் படியுங்கள்
Subscribe