puneetH rajkumar

கன்னட சினிமா நட்சத்திரமானபுனித் ராஜ்குமாருக்குகடந்த 29 ஆம் தேதி காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இது புனித் ராஜ்குமாரின்ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

இந்தநிலையில்புனித் ராஜ்குமாரின்விருப்பப்படி, அவரது மறைவிற்குப்பிறகு அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது தானம் செய்யப்பட்ட புனித் ராஜ்குமாரின்கண்களால் தற்போது நான்கு பேருக்குப் பார்வை கிடைத்துள்ளது.

Advertisment

புனித் ராஜ்குமார் கண்களின்கார்னியாக்களின் மேல் அடுக்குகள், சூப்பர்பிசியல் கார்னியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் கார்னியாவின் ஆழமான அடுக்குகள்எண்டோடெலியல் அல்லது ஆழமான கார்னியல் அடுக்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்கு பேருக்குப் பார்வை கிடைத்துள்ளது.