Skip to main content

மறைவுக்கு பிறகும் நால்வருக்குப் பார்வையளித்த புனித் ராஜ்குமார்!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

puneetH rajkumar

 

கன்னட சினிமா நட்சத்திரமான புனித் ராஜ்குமாருக்கு கடந்த 29 ஆம் தேதி காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இது புனித் ராஜ்குமாரின் ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்தநிலையில் புனித் ராஜ்குமாரின் விருப்பப்படி, அவரது மறைவிற்குப் பிறகு அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது தானம் செய்யப்பட்ட புனித் ராஜ்குமாரின் கண்களால் தற்போது நான்கு பேருக்குப் பார்வை கிடைத்துள்ளது.

 

புனித் ராஜ்குமார் கண்களின் கார்னியாக்களின் மேல் அடுக்குகள், சூப்பர்பிசியல் கார்னியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் கார்னியாவின் ஆழமான அடுக்குகள் எண்டோடெலியல் அல்லது ஆழமான கார்னியல் அடுக்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்கு பேருக்குப் பார்வை கிடைத்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புனித் ராஜ்குமார் பெயரில் கோரிக்கை - நிறைவேற்றிய அரசாங்கம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

as per request by people Karnataka CM named a road Puneeth Rajkumar

 

கன்னட சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் ஏழைகளுக்கு அவர் செய்த பங்களிப்பையும் போற்றும் விதமாக கர்நாடக அரசாங்கம்  கர்நாடக ரத்னா விருது வழங்கியது.

 

இதனிடையே புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிறகு சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மைசூர் சாலையில் உள்ள நாயண்டஹள்ளி சந்திப்பு மற்றும் பன்னர்கட்டா சாலையில் உள்ள வேகா சிட்டி மால் இடையேயான 12 கி.மீ. தூர சாலைக்கு புனித் ராஜ்குமாரின் பெயரை சூட்டியுள்ளது.

 

இந்த நிகழ்வில் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் அஸ்வினி புனித் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு அஸ்வினி புனித் ராஜ்குமார் சமூக ஊடகங்கள் வாயிலாக கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். புனித் ராஜ்குமாரை பல்வேறு வழிகளில் வாழ வைத்ததற்காக மாநில அரசு, கர்நாடகா ஃபிலிம் சேம்பர், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் கடன்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

 

 

Next Story

சிறுவர்களை பள்ளியில் சேர்க்கும்போது கண்களை பரிசோதிக்க வேண்டும்; ஏன்? - விளக்குகிறார் டாக்டர் கல்பனா சுரேஷ்

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

 Eye examination should be done before admission to school - explains Dr. Kalpana Suresh

 

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும், சரி செய்துகொள்ள வேண்டிய தீர்வுகள் குறித்தும் பிரபல கண் மருத்துவர் கல்பனா சுரேஷ் அவர்களிடம் நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த அறிவியல் பூர்வமான விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.

 

சின்ன குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது கண்களை பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கு கண் குறைபாட்டை சொல்லத் தெரியாது. பெற்றோர்கள் கண் மருத்துவர்களை அணுகி பரிசோதித்து குறைபாடு ஏதாவது இருந்தால் ஆரம்பத்திலேயே கண்ணாடி அணிவித்து கண் வளர்ச்சி தன்மையை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

 

ஆரம்பத்திலேயே பரிசோதிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் ஒரு கண்ணில் குறைபாடு இருந்தாலும் கூட அது ‘சோம்பேறி கண்’ என்ற நிலையை அடையும். ஃபோனை அதிகம் பயன்படுத்த விடாதீர்கள். அதனால் கண்களில் கட்டியெல்லாம் வர வாய்ப்பு இருக்கிறது. அவ்வகை கட்டிகள் சூட்டுக் கட்டிகள் ஆகும். 18 வயது வரை அதிகம் ஸ்கிரீன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பிறகு கண் வளர்ச்சித் தன்மை நிலைபெற்றுவிடும்.