Puneeth Rajkumar who sowed ...

கன்னட சினிமா உலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வருடம் 29/10/2021 அன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்கியது. அவருக்கு திரைப்பட நடிகர் என்ற ஒரு பக்கம் இருந்தாலும் மிகச் சிறந்த மனித நேயர் என்பதும், கண் தானம், ஏழை சிறுவர்களின் கல்விக்கு உதவுதது என அவரின் சமூக சேவை முகமும் தெரியவந்தது.

Advertisment

Puneeth Rajkumar who sowed ...

ஏற்கனவே கண் தானம் செய்திருந்த அவரின் கண்கள் அவரது உயிரிழப்புக்குப்பிறகுநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு நான்கு பேருக்கு பொருத்தப்பட்டது. இதனையடுத்து கண் தானத்தின் முக்கியத்துவத்தினை அறிந்த அவரது ரசிகர்கள் அதிகப்படியாக கண் தானம் செய்ய முற்பட்டனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண் தானம் செய்துள்ளனர். அதிலும் மிகக்குறிப்பாக பெங்களூருவில் உள்ளநாராயண நேத்ராலயா என்கிற தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 70,000த்திற்கும் மேற்பட்ட கண் தானங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த மருத்துவமனையில் மாதம் 50 கண்கள் மட்டுமே கிடைத்துவந்த நிலையில் தற்பொழுது 250க்கும் மேற்பட்ட கண்கள் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏதோ ஒரு வகையில் கண் தானத்தின் முக்கியத்துவத்தை மறைந்த புனித் ராஜ்குமார், ரசிகர்கள் மனதில் விதைத்துச் செல்ல அதனை விடாமல் பிடித்து சாதித்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

Advertisment