Advertisment

அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்! (படங்கள்)

புகழ் பெற்ற கன்னட நடிகர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் உடல் பெங்களூருவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீ கண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள பெற்றோர் நினைவிடம் அருகிலேயே முழு அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

இறுதிச் சடங்கில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, சித்தராமையா, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "தனிப்பட்ட முறையில் அப்பு குடும்பத்தினருடன் எனக்கு பிணைப்பு இருந்தது. நான் அவரை சிறுவனாக பார்த்திருக்கிறேன். அந்த நாட்களில் இருந்தே எங்களுக்குள் நெருங்கிய உறவு இருந்தது. எனவே, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்துகிறேன். நிச்சயமாக, நான் உணர்ச்சிவசப்பட்டேன். இது எனக்கு தனிப்பட்ட இழப்பு. சிறந்த திறமைசாலியை இழந்துவிட்டோம்" என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

actor chief minister karnataka puneeth rajkumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe