பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு பட்டர் சிக்கன் கொடுத்ததால் சோமாட்டோ நிறுவனத்திற்கு, அந்த உணவை கொடுத்த ஹோட்டலுக்கும் 55,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

pune court fined zomato for delivering wrong food to customer

புனே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சோமாட்டோ மூலமாக பன்னீர் பட்டர் மாலை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு பட்டர் சிக்கன் வந்துள்ளது. இதனையடுத்து தனது ஆர்டர் மாறியுள்ளது என அவர் சோமாட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது பணம் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் அந்த உணவை அனுப்பிய உணவகத்தின் மீதும், சோமாட்டோ நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ள நீதிபதி, உணவகமும், சோமாட்டோ நிறுவனமும் அந்த வாடிக்கையாளருக்கு 55,000 ரூபாயை இழப்பீடாகசெலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.