
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் புகழ்பெற்ற சிலகூர் பெருமாள் ஆலயத்தில் ஆமை ஒன்று நேற்று தென்பட்டுள்ளது. ஆமையைப் பிடித்து பூஜை நடத்திய அர்ச்சகர்கள், விஷ்ணு புராணத்தில், தசாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமான 'கூர்மம்' எனப்படும் ஆமை, கோயிலுக்குள் வந்திருப்பதால் விரைவில் கரோனாவின் தாக்கத்தில் இருந்து மனித குலம் மீண்டெழும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)