Advertisment

அண்ணா சிலைக்கு மரியாதை செய்த புதுவை முதல்வர்!

 Puduvai Chief Minister paid respect to Anna statue!

Advertisment

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அண்ணா சாலை சந்திப்பில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அரசு சார்பில் மாநில முதலமைச்சர் ரங்கசாமி, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

அதேபோல் தி.மு.க. மாநில (தெற்கு) அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.கவினர் பேரணியாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.கவினர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போல் ம.தி.மு.க, தி.க உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Rangaswamy Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe