Skip to main content

“இதயம் தாண்டி இறைவன் இல்லை..” - கடல் கடந்து காதலியை கரம் பிடித்த தமிழர்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

puducherry youngster marriage viral algeria woman 

 

புதுச்சேரியைச் சேர்ந்த கண்ணன் - நோயலின் என்ற தம்பதியரின் மகன் அபிலேஷ். இவர் கணினி பொறியியல் பாடத்தில்  பட்டம் பெற்றவர். அபிலேஷின் தந்தை இந்து, தாய் கிறிஸ்தவர். அபிலேஷ் தற்போது நெதர்லாந்து நாட்டில் கணினி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் பணிபுரியும் இடத்தில் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் பாத்திமா அப்பி  என்பவரும் பணிபுரிந்து வருகிறார். முதலில் நண்பர்களாக பழகி உள்ளனர். பின்னர் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.

 

இந்நிலையில் தங்கள் காதலை அபிலேஷும் பாத்திமாவும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். மேலும் சாதி, மதங்களைக் கடந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் உறுதி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தங்களது திருமணமானது இருவீட்டார் சம்மதத்துடன் வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க நெறிப்படி திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி வந்த இவர்கள் திருக்குறளின் மீதும், வள்ளலாரின் திருமுறையின் மீதும் உறுதியேற்று திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணம் வள்ளலார் சன்மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களின் இந்தத் திருமணம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.