நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளநிலையில், பள்ளிதேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை ஒவ்வொரு மாநில அரசுகளும் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில்புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல்,இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பருவ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.அதேபோல்அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.