புதுச்சேரி: பிரபாகரன் பிறந்த நாள்- மாவீரர் நாள் தமிழார்வலர்கள் அனுசரிப்பு! 

நவம்பர் 26- தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பிரபாகரன் பெயர் பொறித்த கேக் வெட்டி கொண்டாடினர்.இதேபோல் நவம்பர் 27- தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஈழப் போரில் இன்னுயிர் நீத்த மாவீரர்கள் நாளை முன்னிட்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

puducherry union sri lanka prabhakaran birthday

தமிழர் களம் அமைப்பு சார்ந்த முருங்கப்பாக்கம், வில்லியனூர் சாலை சந்திப்பில் மலர் தூவி வீரவணக்கம் செய்தனர். இந்நிகழ்வில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம், கிராமப்புற பாதுகாப்பு இயக்கம், இந்திய தேசிய முன்னணி, புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழகம், சனநாயக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி தன்னுரிமை கழகம், மனிதனை மனிதனாக நேசிப்போம் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தியதுடன் விடுதலைப் புலிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.

birthday Celebration Puducherry srilanka prabakaran
இதையும் படியுங்கள்
Subscribe