puducherry union liquor tax extend more two months

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், கரோனா தடுப்பு நடவடிக்கை நிதி ஆதாரத்திற்காக மதுபானங்கள் மீது கோவிட் வரி விதிக்கப்பட்டது. இதனால் புதுச்சேரியில் தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை உயரத்தப்பட்டது.

Advertisment

இந்நிலையில் நேற்று முன்தினத்துடன் கரோனா வரி காலம் முடிவடையவிருந்த நிலையில், நேற்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மதுபானங்கள் மீதான கரோனா வரியை ரத்து செய்து பழைய விலைக்கு விற்பனை செய்வதென முடிவெடுத்து அதற்கான கோப்பினை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

Advertisment

இந்நிலையில் மாநில அமைச்சரவையின் முடிவுகளை நிராகரித்து, அடுத்தடுத்த மாதங்கள் பண்டிகை காலம் என்பதாலும், இதனால் கரோனா பரவ வாய்ப்பு உள்ளதாலும் மதுபானங்கள் மீதான கரோனா வரியை மேலும் இரண்டு மாதங்களுக்கு (31.01.2021) வரை நீட்டித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி அமைச்சரவையின் முடிவால் மதுபானங்களின் விலை குறையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கரோனா வரியை மேலும் இரண்டு மாதம் நீட்டித்து கிரண்பேடி உத்தரவிட்டு இருப்பதால் மது பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Advertisment