Puducherry State Transport Corporation employees strike!

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனால் புதுச்சேரி நகரம் மற்றும் வெளியூர்களுக்கு செல்லக்கூடிய 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிமனையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக போனஸ் வழங்கக் கோரியும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதேசமயம் புதுச்சேரியில் தமிழக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதால், பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

Advertisment