புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் வீடூர் அணை திறக்கப்பட்டதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் குளிக்க, மீன்பிடிக்க ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர். மேலும் நீரில் இறங்கி ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (05.12.2019) மாலை வில்லியனூர் பகுதியில் சங்கராபரணி ஆற்றில் புதுப்பேட்டை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்திக்(21), அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வினோத்(24) ஆகியோர் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் ஆற்றில் மூழ்கி உள்ளனர். அவர்களை காப்பாற்ற முயற்சித்தும் அவர்கள் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.