Advertisment

மீனவர் வெட்டி படுகொலை! சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறை விசாரணை! 

புதுச்சேரி கடற்கரை அருகே உள்ளது குருசுகுப்பம் மீனவ கிராமம். இந்த மீனவ கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் இன்று (08.12.2019) காலை மார்க்கெட் வீதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது குருசுகுப்பம் பகுதியில் உள்ள சவேரியார் பேராலயத்தின் எதிரே அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது.

Advertisment

puducherry state fisherman incident police investigation

தலை பகுதியில் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே லோகநாதன் உயிரிழந்தார். தகவல் அறிந்தவுடன் காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையில் காவல்துறையினர், அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment

மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆம்பூர் சாலையில் கொல்லப்பட்ட மீனவர் பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

CCTV footage fisherman incident Investigation police Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe