கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாநில அமைச்சர் கமலக்கண்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Advertisment

PUDUCHERRY SCHOOLS HOLIDAY ANNOUNCED GOVT OVER CORONAVIRUS ISSUES

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை நாளை (16/03/2020) முதல் விடுமுறை என்றும், மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை தொடரும் என்றும் அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.