Advertisment

போலீசாரை தாக்கிய ரவுடிகள்... அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூரை அடுத்த கரிக்கலாம்பக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் ஊருக்குள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ஜோசப் தடையை மீறி ஊருக்குள் வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இதையறிந்த கரிக்கலாம்பாக்கம் போலீசார் சிவகுரு, மைக்கேல் ஆகியோர் உடனே அங்கு சென்றனர். அப்போது கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் ஜோசப் நின்று கொண்டிருந்தார். அப்போது காவல்துறையினர் ஜோசப்பிடம் ஊருக்குள் நுழைய உனக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஊருக்குள் இருக்க கூடாது என்று கூறினார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோசப் போலீசார் சிவகுருவை சரமாரியாக தாக்கினார்.

puducherry rowdies fight with police hospital admit peoples shock

அப்போது தடுக்க வந்த மற்றொரு போலீசார் மைக்கேலை, ஜோசப்பின் தம்பி தமிழ் பிடித்துக் கொண்டார். இதனால் அவருக்கும் அடி விழுந்தது. இதையடுத்து ஜோசப்பும் தமிழும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் நடமாட்ட மிகுந்த பொது இடத்தில் போலீசாரை ரவுடிகள் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fight police Puducherry rowdies
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe