புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை கைதிகள் உட்பட 100 கைதிகள் நேற்று மதியம் முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தங்களுக்கு பரோல் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டஅவர்களிடம், சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடையவே,கைதிகள் தற்போதுவரைஉண்ணாவிரத போராட்டத்தை தொடர்கின்றனர்.
இதையடுத்து தலைமை நீதிபதி இன்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.