
புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ நேற்று (16.02.2021)ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனஇருதரப்பிலும் 14 என்ற சமமான எண்ணைக்கையில் தொடர்வதால் பெருமான்மையைநிரூபிக்கும் சூழல் நாராயணசாமிக்கு ஏற்படுமா? யாருக்குஆட்சி?எனபுதுச்சேரி அரசியல்படுவேகத்தில் பரபரப்புகளுடன் நகர்ந்து வருகிறது.
இன்று காலைஎதிர்க்கட்சியைச்சேர்ந்தவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் துணைநிலை ஆளுநர் அலுவகத்தில் ‘புதுச்சேரிமுதல்வர் பெரும்பான்மையைநிரூபிக்க வேண்டும்’ எனக் கடிதம் வழங்கினர். ஆளுநரின் செயலாளரிடம் இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாஅழைப்பின் பேரில்புதுச்சேரிபாஜகதலைவர் சாமிநாதன், புதுவைபாஜகமேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அண்மையில் பாஜகவில் சேர்ந்தநமச்சிவாயம் ஆகியோர்டெல்லி புறப்பட்டுள்ளனர்.
Follow Us