புதுச்சேரி கோரிமேடு பகுதியில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் 24 வயது மதிக்கத்தக்க சடலம் இருப்பதை பார்த்த குப்பை சேகரிக்கும் தொழிலாளி ஒருவர் கோரிமேடு காவல்துறை நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

Advertisment

puducherry one day two persons incident police investigation

அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கொல்லப்பட்டவர் மேட்டுப்பாளையம் ராம்நகர் பகுதியில் வசிக்கும் ஜெயபால் என்பதும், இவர் பெயிண்டர் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. ஏற்கனவே இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்ததும் தெரிய வந்தது.

Advertisment

ஏற்கனவே கொலை வழக்கில் உள்ள இவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் அவரை மதுபோதையில் தாக்கி கொன்று இருக்கலாம் என்ற கோணத்திலும், அவர் வீட்டினருகே கொலை செய்துவிட்டு வழக்கை திசை திருப்புவதற்காக கோரிமேடு பகுதியில் வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று புதுச்சேரி ஆரியபாளையம் பேட் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (28). என்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரான இவரை அதே பகுதியை சேர்ந்த சபரி, பூவரசன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக நேற்று முன் தினம் (04/02/2020) இரவு வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.

puducherry one day two persons incident police investigation

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று (05/02/2020) இறந்தார். தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் இரண்டு ரவுடிகள் கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் புதுச்சேரி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று நடைபெற்று வரும் கொலைகளை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.