புதுச்சேரியில் நீட்தேர்வுக்குபயந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
புதுச்சேரி அண்ணாநகர்பகுதியைச்சேர்ந்த துரைராஜ். இவரதுமனைவி பரிமளம். இத்தம்பதியருக்கு பிரியதர்ஷினி என்ற மகளும்,ஹேமச்சந்திரன்(வயது 20) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக துரைராஜும்பரிமளமும் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தனது தாயாருடன் வசித்து வந்தஹேமச்சந்திரன்பிளஸ்2முடித்துவிட்டுகடந்த இரண்டு ஆண்டுகளாக நீட்தேர்வுக்குதயாராகி வந்துள்ளார். இருப்பினும் கடந்த இரு முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் போதிய மதிப்பெண் பெறாததால்மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் மூன்றாவது முறையாக நேற்று நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நீட் தேர்வு குறித்தபயத்தால் மன அழுத்தத்தில் காணப்பட்ட ஹேமச்சந்திரனுக்கு அவரது தாயாரும்சகோதரியும்ஆறுதல்கூறியுள்ளனர். மேலும் தனது அறையில் ஹேமச்சந்திரன்நேற்று படித்துக்கொண்டு இருப்பதை இரவு 1 மணியளவில்பரிமளாபார்த்து விட்டுஉறங்கச்சென்றுள்ளார். அதன் பின்னர் நேற்று காலை வழக்கம் போல் எழுந்து மகன்அறைக்குச்சென்று அவர் பார்த்த போது ஹேமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஹேமச்சந்திரன்அறையில் இருந்தஒரு கடிதத்தில், "நாம் அனைவரும் ஒரே இடத்தில்வசித்தாலும் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். நான் இதுவரை வாழவே இல்லை. அதனால் வெளியேறிவிடுகிறேன். எனது அம்மாவை யாரும் குறை கூற வேண்டாம். இது என்னுடைய முடிவு" என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். நீட்தேர்வுக்குபயந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம்புதுச்சேரியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.