"அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டோரை அரசு விட்டுவைக்காது" -நாராயணசாமி எச்சரிக்கை

puducherry narayanasamy

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,

புதுச்சேரியில் கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 97 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர். தீபாவளி முடிந்து பத்து அல்லது பதினைந்து நாட்களில் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான், பஞ்சாப்பில் கரோனா பரவல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் புதுச்சேரி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கரோனாதொற்று மீண்டும் வந்தால் மாநிலம் தாங்காது. வருவாய்குறைவு, மத்திய அரசின் உதவியும் இல்லை.

காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் ரவுடி கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். வெடிகுண்டு வீசி, ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.இதில் மிகப்பெரிய சதி பின்னணி உள்ளது. தொடர் தேர்தல் பணியால் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. காவல்துறை தீவிரமாக விசாரிக்கிறது. அவருக்கு தகுந்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கொலைகள், கொள்ளைகள் புரிவோரை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஊக்குவிக்கிறார்கள். மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறும் தொடர் கொலைக்கு அப்பகுதி அரசியல் தலைவர்கள் பின்னணியில் இருக்கிறார்கள். அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டோரை அரசு விட்டுவைக்காது.

புதுச்சேரி மாநில தனியார் மருத்துவக்கல்லூரி, நிகர்நிலை பல்கைக்கழகங்களில் 50 சத இடஒதுக்கீடு தரவேண்டும். சட்டவரையரை தயார் செய்து மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் கிடைத்த பிறகு சட்டமாக நிறைவேற்றுவோம். 10 சதவீதக் கோப்புக்குஅனுமதி கிடைத்தவுடன் நடைமுறைப்படுத்துவோம். அனைத்து முயற்சிகளும் எடுக்கிறோம். அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்க அனைத்து முயற்சியும் எடுப்போம்என்றார்.

Narayanasamy Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe