Advertisment

கேரள மக்களுக்காக புதுச்சேரி எம்.எல்.ஏ, எம்.பிக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும்- நாராயணசாமி வேண்டுகோள்!

narayanasamy

Advertisment

புதுச்சேரியிலுள்ள சட்டப்பேரவை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் நிதிமற்றும் நிவாரணப்பொருட்கள் விரைவில் கேரளாவிற்கு அனுப்பி வைக்கபடும். கேரள மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். கேரள மக்களுக்கு நிதி அளிக்க விரும்பும் பொதுமக்கள் புதுச்சேரியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் வாங்கப்படும், அதற்கான ரசீதும் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும்.

நிவாரண நிதிக்காக அரசு சார்பில் தனி வங்கி கணக்கு தொடங்கப்படும். வாங்கப்படும் நிவாரண பொருட்கள் விரைவில் கேரள மக்களுக்கு அனுப்பபடும்.

kerala flood narayansamy Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe