எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்- புதுச்சேரி சபாநாயகருக்கு நோட்டீஸ்!

PUDUCHERRY MLA DISQUALIFIED CHENNAI HIGH COURT ORDER

எம்.எல்.ஏ தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சபாநாயருக்கு நோட்டீஸ் அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளும்கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், புதுச்சேரி அரசு கொறடா புகாரின் அடிப்படையில் சபாநாயகர் சிவக்கொழுந்து ஜுலை 10- ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) தனவேலுவைத் தகுதி நீக்கம் செய்தார்.

PUDUCHERRY MLA DISQUALIFIED CHENNAI HIGH COURT ORDER

சபாநாயகர் முடிவை எதிர்த்துதனவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (14/07/2020) உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயர் சிவக்கொழுந்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்தியத் தேர்தல் ஆணையமும் நான்கு வாரங்களில் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, வழக்கை ஒத்திவைத்துள்ளது.

assembly Lawyer chennai high court Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe