"வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை"- அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவிப்பு!

puducherry minister announced up coming assembly election i did not standing

புதுச்சேரி மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஆந்திர மாநிலம், ஏனாம் சட்டமன்றத் தொகுதிஎம்.எல்.ஏ.வான மல்லாடி கிருஷ்ணாராவ். இவரின் 25 ஆண்டுகால மக்கள் பணி (வெள்ளிவிழா) மற்றும் சிறந்த எம்.எல்.ஏ.வாக மூன்றாம் முறை தேர்வானதற்கான விருது வழங்கும் விழா ஆந்திர மாநிலம் ஏனாமில் நேற்று (06/01/2021) நடந்தது.

இவ்விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, சபாநயகர் சிவக்கொழுந்து, ஆந்திர சபாநாயகர் தமேனி சீத்தாரம், புதுவை அமைச்சர்கள், ஆந்திர மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர் உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.

puducherry minister announced up coming assembly election i did not standing

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், "ஏனாம் தொகுதியில் வரும் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை, என்னுடைய குடும்பத்தில் இருந்தும் யாரும் போட்டியிட மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்வின் இந்தப் பேச்சு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

minister Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe