கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

Advertisment

இக்கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தததாக அரசியல் கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

puducherry meeting thirumavalavan mp speech police fir filed

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மேலும் திருமாவளவன் எம்.பி மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி பெரம்பலுரைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி கண்ணன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பெரம்பலூர் போலீசார் தமிழக டி.ஜி.பிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் புதுச்சேரி என்பதால் புகாரை புதுச்சேரி போலீசாருக்கு தமிழக போலீசார் பார்வேர்ட் செய்த நிலையில் நேற்று (11/03/2020) புதுச்சேரி, ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் எம்.பி மீது மத அவமதிப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.