PUDUCHERRY MAKKAL NEEDHI MAIAM LEADER INCIDENT CORONAVIRUS

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைளை மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில், அம்மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் (70) கரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (03/09/2020) உயிரிழந்தார்.

Advertisment

உயிரிழந்த சுப்பிரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை ஆகிய தொகுதிகளில்தி.மு.க.சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.