புதுச்சேரி அம்பலத்தடையார் மடம் வீதியில் உள்ள தங்கும் விடுதியில் ஓரிரு நாள் முன்பு கடலூர் பகுதியை சேர்ந்த இரு காதல் ஜோடிகள் தங்கியுள்ளனர்.

Advertisment

அப்போது ரோந்து பணியில் சென்ற பெரியக்கடை காவலர் சதீஷ்குமார் மற்றும் ரிசர்வ் பட்டாலின் காவலர் சுரேஷ் ஆகியோர் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதில் ஒரு ஜோடி பணம் இல்லை என கூறியதால் காதலன் கண் முன்னே காதலியான கல்லூரி மாணவிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

puducherry lovers police take money suspended order

ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று பெரியகடை போலீசார் மறுத்துள்ளனர். ஆனாலும் இதுகுறித்த புகார் கவர்னர் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதையெடுத்து காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகள் தனிக் குழுவாக நேரடி விசாரணையில் இறங்கினர். சம்பவத்தன்று பணியிலிருந்து ஆபீஸர்கள் விடுதியில் தங்கியிருந்த கடலூரைச் சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகளும் தனித்தனியாக வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாலியல் அத்து மீறல் குறித்து உறுதிசெய்யப்படவில்லை.

ஆனாலும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, பணம் பறித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் தொடர்புடைய பெரியகடை காவலர் சதீஷ்குமார், ரிசர்வ் பட்டாலின் காவலர் சுரேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் துறை ரீதியான விசாரணைக்கும் காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்வா உத்தரவிட்டுள்ளார்.

Advertisment