புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சோழன். இவர் மீது காலாப்பட்டு சந்திரசேகர் கொலை, முத்தியால்பேட்டை ரவுடி அன்பு ரஜினி கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட ரவுடி சோழன் தற்போது காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சிறையில் இருந்த சோழனை புதுச்சேரி போலீசார் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

Advertisment

puducherry lawspet chozhan court police

அப்போது சோழன் கூலிங் கிளாஸ் கண்ணாடி மற்றும் ஷூ அணிந்து கூட்டாளிகளுடன் ஸ்டைலாக நடந்து வந்தார். அப்போது அவர் தன்னை பார்க்க வந்த ஆதரவாளர்களை பார்த்து கும்பிட்டவாறும், ஸ்டைலாக கை அசைத்த வாரும் நடந்து சென்றுள்ளார். இதனை அவரது ஆதரவாளர் ஒருவர் வீடியோ எடுத்து ரஜினி நடித்துள்ள `தர்பார்’படத்தின் பாடலை மிக்ஸிங் செய்து, ஒப்பிட்டு டிக்டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறைக்குள் நடத்திய அதிரடி சோதனையில் 11 செல்போன்களை கைதிகளின் அறைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.