Advertisment

புதுவையில் முதியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு! 

புதுச்சேரி பாலாஜி நகர் மொட்டை தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தத்துவசாமி என்கிற சாமி தனிமையில் வசித்து வந்தார். இவரது வயது 55. இன்று காலை வெகு நேரமாகியும், அவரது வீட்டின் முன்கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்பின் வாட்ச்மேன் வீட்டின் கதவை திறந்து பார்த்தார். அப்போது அவர் ரத்தவெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisment

puducherry korimedu old man incident police investigate

இது குறித்து அவர் கோரிமேடு தன்வந்திரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். உடனே அங்கு சென்ற போலீசார் குற்றவாளியை அடையாளம் காண, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களையும் வரவழைத்தனர். அவர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் 2 பேர் தத்துவசாமியின் வீட்டுக்கு சென்றதும், அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் வாட்ச்மேன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் தத்துவசாமியை கொலை செய்தார்களா? அல்லது வாட்ச்மேன் கூறுவது கதையா? என்ற கோணத்தில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment
incident old man Puducherry India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe