Advertisment

காலாப்பட்டு சிறைக் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் சரண்! 

புதுச்சேரி கரிக்கன் நகர் ஜெயமூர்த்தி காவலில் மரணம் அடைந்த வழக்கில் கடந்த 17.09.2019 அன்று சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவர் டாக்டர் வெங்கட்டரமண நாயக் ஆகியோரின் முன்பிணை (Anticipatory Bail) மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisment

puducherry kalappattu Superintendent of Prison surrender at court

மேலும், இவ்வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத புதுச்சேரி அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, அதனைப் பாதிக்கப்பட்ட கெளசல்யாவுக்கு (ஜெயமூர்த்தியின் மனைவி) அளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதனையடுத்து சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாஸ்கரன் சிறை கண்காணிப்பாளராக இருந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளது புதுச்சேரியில் பரபரப்பாகியுள்ளது.

kalapattu court Surrender Superintendent of Prison Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe