Advertisment

"புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவ நுழைவுத்தேர்வு மையங்கள் அறிவிப்பு"!

puducherry jipmer medical entrance exam

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி, ஸ்ரீ மணகுள விநாயகர் பொறியியல் கல்லூரி, மணகுள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, கிரிஸ்ட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஆல்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணாபொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் நாளை (21/06/2020) நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. (Admit Card) அல்லது (Curfew Pass)- ஐ காண்பித்து தங்களின் தேர்வு மையத்திற்குச் சென்றடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்எம்.டி./ எம்.எஸ்./ எம்.டி.எஸ் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நாளை (21/06/2020) காலை 09:30 முதல் மதியம் 12:30 வரையும், பி.டி.எஃப்./ பி.டி.சி.சி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு காலை 09:30 முதல் 11:00 வரையும் நடைபெறுகிறது.

Advertisment

எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ், பி.டி.சி., பி.டி.சி.சி. படிப்புகளுக்கு நாளை (21/06/2020) ஆன்லைனில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Entrance Exam Medical jipmer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe