Advertisment

மகளை பாலியல் வன்புணர்வு செய்த வளர்ப்பு தந்தை கைது!

ppppp

Advertisment

புதுச்சேரி, கோரிமேடு அரசு பல் மருத்துவமனை பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த 16 வயது பள்ளி மாணவி உடலில் பலத்த காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 25-ஆம் தேதி மாலை அனுமதிக்கப்பட்டார்.

அந்த சிறுமியின் உடல் முழுவதும் காயங்களும், சூடு வைத்த காயங்களும் இருப்பதை கண்ட மருத்துவர்கள் சந்தேகமடைந்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குழு தலைவர் ராஜேந்திரன் காயமடைந்த மாணவி மற்றும் 35 வயதான அவரின் தாயாரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், மாணவியின் சிறிய வயதிலேயே தந்தை மனநலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதன்பிறகு மாணவியின் தாய் 32 வயதான டைல்ஸ் தொழிலாளியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. இதற்கிடையே முதல் கணவருக்கு பிறந்த 16 வயது சிறுமி பருவமடைந்த நாள் முதல் இரண்டாவது கணவரான வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து உன் தாயிடம் தெரிவித்தால் உன்னையும், உன் தாயையும் கத்தியால் குத்தி கொன்று விடுவேன் என்று சிறுமியிடம் மிரட்டி வந்துள்ளார். இதுபோல மிரட்டியே கடந்த 3 ஆண்டுகளாக அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி தாயிடம் நடந்த சம்பவங்களை சொல்லாமல் இருந்துள்ளார்.

இதற்கிடையில் ஒரு நாள் வளர்ப்பு தந்தைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி, அவரது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார் சிறுமி. பின்னர் சிறுமியை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகும் சிறுமிக்கு அதிகளவில் கொடுமை செய்து வந்துள்ளார் வளர்ப்பு தந்தை.

இந்த நிலையில் வளர்ப்பு தந்தை தனக்கு பிறந்த மூன்று குழந்தைகளையும் கடந்த 25ஆம் தேதி அடித்து, கடுமையாக தாக்கி துன்புறுத்தியுள்ளார். இரண்டரை வயது குழந்தையை சுவற்றில் அடித்துள்ளார். இதனை கண்டு கோபமடைந்த 16 வயது சிறுமி, 'உன் பிள்ளைகளையே கொடுமை செய்கிறாயா...' என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வளர்ப்பு தந்தை தனக்கு பிறந்த மூன்று பெண் குழந்தைகளையும் கட்டி வைத்து அடித்த தொடங்கினார். மேலும் வளர்ப்பு மகளின் கையை உடைத்து, தலையில் பலமாக தாக்கி, இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி சிறுமியின் உடலில் சூடு வைத்துள்ளார்.

தலையில் அடிபட்டதில் ரத்த இழப்பு ஏற்படவே சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.வீட்டிற்கு திரும்பிய தாய் நடந்த சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது பெரிய மகளை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதன்பிறகு சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து தாயிடம் கூறியுள்ளார் என தெரிய வந்தது.

இதையடுத்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், இனியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிந்து வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.

கைதான வளர்ப்பு தந்தையை கரோனா பரிசோதனை செய்வதற்காக தனிமைப்படுத்தி இருப்பதாகவும்,பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வளர்ப்பு தந்தையே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சூடு போட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police investigation incident Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe