தமிழகம் மற்றும் புதுவையில் காற்றின் மேலடுக்கு சுழற்சிக் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுவை மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puducherry govt.jpg)
இந்நிலையில் மழையால் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை (02.12.2019) விடுமுறை என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக புதுவை மாநிலத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
Follow Us