Advertisment

அரசு பள்ளி ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் என பெற்றோர்கள் புகார்!

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சார்ந்தவர் ராஜசேகர். இவர் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9- ஆம் வகுப்பு மற்றும் 10- ஆம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றிய அவர் கடந்த 1 வருடமாகத்தான் பிள்ளையார்குப்பம் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 9 மற்றும் 10 வகுப்பு மாணவிகள் பலர் ஆசிரியர் உடலை வருடுவது, பின்பக்கம் தொடுவது, தேவையில்லாத இடங்களில் பார்ப்பது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருவதாக தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

puducherry govt school teacher innocent activities students and parents complaint police search

அதையடுத்து 12 மாணவிகளின் பெற்றோர்கள் இது குறித்து குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் பள்ளிக்கே சென்று விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியர் இதுபோன்று பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதையடுத்து வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்ய சென்றபோது ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். பள்ளி சிறுமிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்த சம்பவம் கிராமப்பகுதியான அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police innocent teacher school Puducherry India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe