Advertisment

முதலமைச்சர் நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் கிரண்பேடி உத்தரவு! 

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்ததிலிருந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

Advertisment

puducherry governor and cm narayanasamy helmet issue tweet

இந்நிலையில் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரம் செய்த போது, 'கவர்னர் கிரண்பெடி தேர்தல் விதிகளை மீறி செயல்படுகிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது ஏனாமில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதனால் அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வதுடன், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்' என்றார்.

puducherry governor and cm narayanasamy helmet issue tweet

Advertisment

இதனிடையே இடைத்தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான 19- ஆம் தேதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவான பிரச்சாரத்தின் போது நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினர். அப்போது முதலமைச்சர் நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்ற படம் ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியானது. நாராயணசாமியின் அந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரண்பெடி,‘மோட்டார் வாகன சட்டத்தை மீறும் இச்செயல் வெட்கக்கேடானது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகள், சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவிடம் சட்டத்தின் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.

puducherry governor and cm narayanasamy helmet issue tweet

அதனால் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்றது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா..? என்ற பரபரப்பு புதுச்சேரியில் எழுந்துள்ளது

அதேசமயம் கிரண்பேடியின் இந்த பதிவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள நாராயணசாமி, ‘ஒரு கருத்தை கூறுவதற்கு முன் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பாருங்கள்’என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டி.ஜி.பி ஸ்ரீ பாலாஜி வஸ்தவாவிடம் புகார் அளித்துள்ள புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பினர் சில ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர பகுதிகளில், இரவு நேரத்தில் ஆய்வு செய்த கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து செல்லும் படத்தை குறிப்பிட்டு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றை கிரண்பேடி மீறியுள்ளதாகவும் ,சட்டத்தின் ஆட்சி நிலை பெற இந்த போக்குவரத்து விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர்.

puducherry governor and cm narayanasamy helmet issue tweet

மீண்டும் தலைக்கவசம் (ஹெல்மெட்) விவகாரத்தில் புதுச்சேரியில் கிளம்பியுள்ள புகைச்சல் யாரை எரிக்க போகிறதோ எனும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tweets governor kiran bedi cm narayanasamy Puducherry India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe